பாலக்கோடு அருகே கள்ள சாராயம் விற்றபனை செய்த இருவர் அதிரடி கைது!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக கள்ளசாராயம் விற்பனை செய்த 2நபர்கள்  கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் கிராமப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு தகவல் கிடைத்தது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி மற்றும் மூங்கப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் கவுண்டனூர் பகுதிகளில் சாராயம் 1 லிட்டர் 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்வதாக தகவல் அளித்தார் அதன் பேரில் விரைந்து சென்ற பாலக்கோடு போலீசார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்த மூங்கபட்டி மற்றும் பி.கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி(47) கார்த்திக் (26)ஆகிய இருவர் கைது. 20 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல் செய்து பாலக்கோடு போலீஸார் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!