பாலக்கோடு பகுதியை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளி வீடு திரும்பினார்: கிராம பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு.!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கடமடை பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் நோயாளி நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.சேலம் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளி  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடமடை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு 108 அவசர ஊர்தியில் சேலத்தில் இருந்து தர்மபுரி வந்தடைந்தார்.அவருடைய சொந்த கிராமத்தில் பொதுமக்கள் மலர் தூவி ஆலத்தி எடுத்து  கைதட்டி  வரவேற்பு அளித்தனர் . அவருடைய  வீட்டுக்கு  ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.மாவட்டத்தில் இதுவரை 5 பேர் கரோனாவைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர் இதில் இருவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். இன்னும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாவட்டம் தருமபுரி என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!