பாலக்கோட்டில் பந்தல் ஒலி&ஒளி அமைப்பாளர் மற்றும் ஸ்டேஜ் டெக்ரேஷன் சங்கம் சார்பில் நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம்  பாலக்கோட்டில் பந்தல் ஒலி&ஒளி அமைப்பாளர் மற்றும் ஸ்டேஜ் டெக்ரேஷன் தொழிலில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமணம் மற்றும் சுப முகூர்த்தம் நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரம் இழந்து அடிப்படை தேவை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் உள்ள நிலையில் இதில் சிலர் தினகூலி வேலை செய்தால் மட்டுமே குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின்  வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் அளவிலும் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாலக்கோடு ஒன்றியம் ஒலி& ஒளி அமைப்பாளர் மற்றும் ஸ்டேஜ் டெக்ரேஷன் சங்கம் மற்றும் ஹயர் ஓனர்ஸ் அசோசியேசன் இணைந்து நலிவுற்ற 55 தொழிலாளர்களுக்கு 2000ரூபாய் மதிப்புள்ள அரிசி, கோதுமை மற்றும் மளிகை பொருட்கள், முக கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை பாபுசுந்தரம், மற்றும் சின்னசாமி, வெங்கடேசன், தருமன், குமார், ஜீயா, ஐயப்பன், ஜனார்தனன், முனியப்பன், மணி, ரமேஷ், கோவிந்தன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!