பாலக்கோடு அருகே ஜிட்டான்ஹள்ளியில் அப்பகுதியில் திருட்டுத்தனமாக கள்ளசாராயம் விற்பனை: தினந்தோறும் கள்ள சாராயம் குடித்து வீட்டுக்குச் சென்றதால் ஒன்பது மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து ஜிட்டான்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த குமார் வயது 26. அவரது மனைவி முனிரத்தினம் என்கிற சுவேதா வயது 21. குமார் கூலித்தொழிலாளி இருவருக்கும் திருமணம் முடிந்து 1 அரை வருடம் முடிந்த நிலையில் சுவேதா ஒன்பது மாத நிறை கர்ப்பிணியாக இருந்து வந்தாள். தமிழக அரசு ஊரடங்கு உத்தரவால் மக்கள்வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அப்பகுதியில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும் அதை தினந்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால் வீட்டில் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த 9 மாத நிறை கர்ப்பிணி சுவேதா நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் உள்ள மேல் பேன் கொக்கி மூலம் சேலை மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். சம்பவம் அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் விரைந்து சென்று பாடிய கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு மதுக்கடையை மூடியும் கிராமப்பகுதிகளில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காசி விற்பதால் பரிதாபமாக ஒரு நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!