பாலக்கோட்டில் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 100ரூபாய் வரை விலை உயர்வால் மத்திய, மாநில அரசு தொகுப்பு வீடு கட்டுவதில் சிக்கல்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் 2019-2020 ஆண்டிற்கான பாரத பிரதம மந்திரி வீடு மற்றும் தமிழக அரசு வழங்கும் பசுமை வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் முதல்கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது கட்டுமான பணிகளுக்கு மட்டும் சில தளர்வுகள் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாரத பிரதமர் வீடு மற்றும் பசுமை வீடு கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சிமெண்ட் தேவை அதிகரித்திருப்பதுதான், விலை உயர்வுக்கு  காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இது செயற்கையாக நிகழ்த்தப்பட்ட ஒன்று என்று கட்டுமான சங்க அமைப்புகளும் நலிவுற்ற வீடுகட்டும் பொதுமக்களும் தெரிவித்துள்ளன.

சிமெண்ட் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள் விலை எதுவும் உயர்த்தப்படாத போது சிமெண்ட்டின் விலை மட்டும் உயர்த்துவது எந்த விதிதத்தில் நியாயம்.

இதனால், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி திட்டச் செலவுகள் உயரும்.

இந்த விலை உயர்வால் 290 ரூபாயாக விற்கப்பட்டு வந்த மூட்டை சிமெண்ட் விலை 390 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் சில நிறுவனங்களின் பெயர் கொண்ட சிமெண்ட் 350ரூபாயிலிருந்து 450ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கட்டுமானப்பணியை மீண்டும்துவக்க முடியாமல் கட்ட உரிமையாளர்கள் திணறுவதால், கட்டுமானப்பணி பாதிக்கும் அபாயம் உள்ளது.சிமென்ட் உற்பத்தி குறைவு, சரக்கு லாரி வருவதில் சிக்கல் ஏற்பட்டதால் விலை உயர்ந்தது,என மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் கூறி வருவாதால் என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்  . எனவே தமிழ்நாடு அரசு தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!