பாலக்கோடு மாரண்டஹள்ளி நகரில் மளிகை பொருட்கள் 40 சதவீதம் விலை அதிகரிப்பு! பொதுமக்கள் அவதி! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மாரண்டஹள்ளி பேரூராட்சி நகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மாதம் 23ம் தேதி முதல் 144தடை மற்றும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   வெளிமாநிலங்களில் இருந்து மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை   சிரமம் இன்றி கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு வருகிறது. கர்நாடகாவில் இருந்து சர்க்கரை, கோதுமையும், ஆந்திராவில் இருந்து மிளகாய், கொத்தமல்லி, அரிசியும். மகராஷ்டிராவில் இருந்து கடலைப்பருப்பும் வருகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வரவேண்டிய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சிரமமின்றி வந்துகொண்டிருக்கும் நிலையில் மளிகை பொருட்கள் விலை உயர தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் மளிகை பொருட்களுக்கு பற்றாக்குறை அறவே இல்லை என்று கூறிவிட்டு வணிகர்கள்  மொத்த மார்க்கெட்டில் கொத்தமல்லி கிலோ 85லிருந்து 110, குண்டு மிளகாய் 135லிருந்து 170, துவரம் பருப்பு 87லிருந்து 120, உளுந்தம் பருப்பு 97லிருந்து 130, பாசிப்பருப்பு 105லிருந்து 130, கடலைப்பருப்பு 52லிருந்து 72, சர்க்கரை 35லிருந்து 45, கோதுமை மாவு 30லிருந்து 45, மிளகு 350லிருந்து 450, மிளகாய் 145லிருந்து 160, 170 என்று பாமயில் 85லிருந்து 97, வெல்லம் 40லிருந்து 100 விற்பனையாகிறது. மேலும்  ஒரு சில மளிகை கடைகளில் குறைந்த விலை அரிசியை விலை உயர்ந்த  பிராண்ட் உள்ள பைகளில் நிரப்பி  சில போலியான அரிசியையும் இப்பகுதி மளிகைக் கடைக்காரர்கள் விற்பனை செய்வது தெரியவருகிறது. தமிழகத்தில் மளிகை பொருட்கள் சிரமமின்றி  கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும்  சில குறிப்பிட்ட மளிகைக் கடைகாரர்கள் விலையை அவரவர் விருப்பத்திற்கு தகுந்தவாறு ஏற்றிக் கொண்டே செல்வது பொதுமக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது எனவே ஒவ்வொரு மளிகைக் கடையின் முன்பு தினசரி விலை பட்டியலை வைத்து அதனை மக்கள் தெரிந்துகொள்ள வகைசெய்யும் படி  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு  இந்தப் போலியான விலையேற்றத்தை தடுக்க வேண்டுமென  பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!