பாலக்கோடு அருகே பெரியானூர் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரானா: சந்தேகத்தில் கிராமம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை…

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெரியானுர் செட்டிப்பட்டியைய் சேர்ந்தவர் பாலாஜி இவர் ஈரோட்டில் தறி வேலை செய்துவரும் நிலையில் கடந்த ஜனவரி மாதமே ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் இவரது மனைவி சத்யா 22 என்பவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு பொது சோதனை நடத்தி வரும் நிலையில் நேற்று மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பொது பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் அவரது இரத்த மாதிரியை தருமபுரிக்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரானா தொற்று இருப்பதாக தெரியவந்திருக்கிறது. மேலும் அந்த பரிசோதனையின் முடிவை கொண்டு அந்த கிராமம் முழுவதும் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 150 வீடுகள் உள்ள இந்த கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு  ஒவ்வொருவருக்கும் தற்பொழுது கொரானா பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி  கூறிய பொழுது பெரியானுரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணிற்கு எடுக்கப்பட்ட முதல் கட்ட சோதனையில் கொரானா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் தற்பொழுது இரண்டாம் கட்டமாக சத்யா மற்றும் அவரது உறவினர்கள் 9 பேருக்கு மாதிரிகள் எடுத்து தருமபுரி செட்டிகரையில் உள்ள கொரானா பரிசோதனை மையத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பரிசோதனையின் முடிவு வெளி வந்த பிறகே மற்ற தகவல்களை வெளியிட முடியும் என்று கூறினார். மாரண்டஅள்ளி அருகே உள்ள கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதல் கட்ட சோதனையில் கொரானா தொற்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!