தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி ஊராட்சியில் நீரோடை கால்வாய் பகுதிகளை தனிநபர் ஆக்கிரமைப்பு செய்து உள்ளதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வீடுகளில் புகும் நிலை உள்ளது. நீரோடை ஆக்கரமைபை அகற்றவிட்டால் வரும் காலங்களில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எர்ரணஅள்ளி ஊராட்சி மற்றும் பாலக்கோடு பேரூராட்சியில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் காலம் காலமாக இருக்ககூடிய நீர்வழி பதை கால்வாயில் சென்றால் தாமரை ஏரிக்கு சென்று அடையும். மேலும் சின்னாற்றில் இருந்து பொதுபணிதுறைக்கு செந்தமான ஜெர்த்தலாவ் ஏரி இடது புறகால்வாயில் இருந்து தருமபுரிக்கு செல்லும் பொதுபணித்துறை கால்வாயிலிருந்து மதகு வழியாக புங்குட்டை ஏரி, மன்னார்குட்டை ஏரி நிறம்பி வெளியோரும் தண்ணீர் மற்றும் நீர்ரோடை கால்வாய் மூலம் மழைநீர் தவளாய்அள்ளி, புதூர், மூங்கப்பட்டிபாலம், அண்ணாநகர், பாலக்கோடு பேரூராட்சி கழிவுநீர் ஆகியவை இணைந்து அரசு பேருந்து பணிமனை முன்பு உள்ள நீரோடை கால்வாய் வழியாக தாமரை ஏரிக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. தற்போது நீரோடை கால்வாய் பகுதிகளை ஆக்கிரமைப்பு செய்து வீட்டு மனைகள் மற்றும் விவசாய நிலங்களாக மாற்றியதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியோர முடியாமல் குடியிருக்கும் வீடுகளிலும், சுடுகாடு, மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் தாருமாறக நீர் வெளியோடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீரோடை கால்வாய்களை ஆக்கிரமைப்பு செய்துள்ள பகுதியில் மழைநீர் விவசாய நிலத்திலும், வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீரோடை கால்வாய் ஆக்கிரமைபை அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









