பாலக்கோடு எருது விடும் நிகழ்ச்சியில் போலீசார் லேசான தடியடி, மாடு முட்டி ஒரு காவலர் உட்பட 10 பேர் படுகாயம்..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாசிமாத ஶ்ரீபுதூர்மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும்  திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .இத்திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று  எருது விடும் நிகழ்ச்சியில் 12 கிராம பொதுமக்கள் ஒன்றினைந்து ஊருக்கு ஒரு காளைகள் விதம் 12  காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் மாடு விடப்பட்டது அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட  காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர் இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர், பாலக்கோடு பனங்காடு  ஸ்ரீ புதூர் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் இத்திருவிழா  எருது விடும் நிகழ்ச்சிக்கு போதுமான  தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் மாடு முட்டி ஒரு காவலர் உட்பட  10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இத்திருவிழா தொடர்ந்து 27 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில்  அசம்பாவிதங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!