பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை..!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.  மேலும் நகரில் காலை மற்றும் மாலை வேலையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வருகின்றது. பாலக்கோடு பஸ்நிலையத்திற்கு   சென்னை, கோவை மற்றும்  கர்நாடக,  போன்ற வெளிமாநில பேருந்துகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி வந்துசெல்கின்றன. பஸ்நிலையத்தில்  இரவு 10 மணி வரை  பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுக்கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் பஸ் நிலையத்தில் நடத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது . மேலும்  பஸ் நிலையத்தை சுற்றியுள்ள  வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் .இதனால் இந்த பேரூந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.  இதனால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுவது மட்டுமின்றி அவரச தேவைக்கு ஆம்புலன் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!