பாலக்கோட்டில் பாரத பிரதமரின் கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் மூலம் 135 விவசாயிகளுக்கு 1.50கோடி கடன் வழங்கும் விழா..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பாக பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட விவசாய பொதுமக்களுக்கு பாலக்கோடு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் களப்பணி அதிகாரிகள் பாரத பிரதமரின் திட்டம் தொடர்பாகவும் அதனைப் பெறும் வழி வகைகளையும் விரிவாக விளக்கி எடுத்துரைத்தனர். திட்டத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்க தொகை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்றும் இத் திட்டத்தில் இணைய விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் சிட்டா அடங்கல் ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு கணக்கு புத்தகம் நகல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விவசாயிகளின் நிலப்பரப்பின் அடிப்படையில் தங்கள் பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்கு மத்திய அரசு உழவர் பாதுகாப்பு கடன் அட்டை வழங்க உள்ளது. நிலத்தில் பயிர் செய்யும் பயிர் கடனுக்காக கடன் தொகையை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை பிணையம் இல்லாமல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் பெயர் கிஷான் கிரெடிட் கார்டு விவசாயிகள் பெற்று பயன் அடைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த திட்டத்தை பெற விவசாய பொதுமக்கள் பிரதமரின் உயிர் காப்பீடு திட்டம் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் கட்டாயமாக வழங்கப்படும். என்றும் இந்த ஆண்டிற்கான முறையே ரூபாய் 12 ரூபாய் மற்றும் 330 ரூபாய் பிரீமியம் தொகையாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த கிசான் கார்டு மூலம் 45 நாட்களுக்கு ஒருமுறை பணபரிவர்த்தனை செய்தால் உயிர் காப்பீடு திட்டம் கிடைக்கும். என்றும் இதேபோல் நல்ல பல வசதிகளை இத்திட்டத்தில் இருப்பதால் விவசாயிகள் பயன் அடைந்து கொள்ளுமாறு தெரிவித்தனர். மேலும் இந்த முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டதில் 135 விவசாயிகளுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான கடன் அனுமதி கடிதத்தை பாரத ஸ்டேட் வங்கி மேலதிகாரி வழங்கினார். இதையடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. தலைமை குண்டுராவ் பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர், மணிவண்ணன் உதவி பொது மேலாளர் ,பார்த்தசாரதி நபார்டு வங்கி உதவி பொது மேலாளர், கண்ணன் முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் விவசாய அதிகாரி அன்பரசு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மற்றும் விவசாய பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!