வேடசந்தூர் எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது..

வேடசந்தூர் எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகளான க.கவியரசி, இரா.லாவண்யா, ம.மகேஸ்வரி, இரா.மீனாட்சி, பொன்ஆர்த்தி, பா.செல்வி, பா.பிரமிளா, ரா.பிரித்தா,ர.ரீனா, ஆகியோர் இணைந்து கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் தின விழாவை சிறப்பாக நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் பாலின சமத்துவத்தின் அவசியம், விவசாயத்தின் முக்கியத்துவம் இளைஞர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு உரைகள் வழங்கப்பட்டன. மேலும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை அவரது சிந்தனைகள் மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இனிப்புகள் பரிமாறி, மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த இளைஞர் தின நிகழ்ச்சி மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!