திண்டுக்கல் மேற்கு தாலுகா தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிக்கும் வகையில்11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வருகிறது.இந்த கட்டுப்பாட்டு அறையை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா துவக்கி வைத்தார்கள்.மேலும், இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் தாடிக்கொம்பு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.





You must be logged in to post a comment.