திண்டுக்கல் மேற்கு தாலுகா ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் முத்தழகுபட்டியில் ஒவ்வொரு வருடமும் புனித செபஸ்தியார் திருவிழா” மற்றும் மாபெரும் அன்னதானப் பெருவிழா, தேர்த்திருவிழா கொண்டாடுவதை அப்பகுதிவாழ் மக்கள் வழக்கமாக
கொண்டிருந்த நிலையில் தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்த திருவிழாவை நிறுத்தி வைப்பதாவும் புனிதருக்கு நேர்த்திக்கடன் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஆடு, கோழி, மற்றும் காணிக்கைப் பொருட்களை ஆலய நிர்வாகிகளிடம் வருகின்றஆகஸ்ட் மாதம் 3, 4, 5 – ஆகிய தேதிகளில் ஒப்படைக்கலாம் என்றும் அதைமீறிபுனித செபஸ்தியார் கோவில் முன்பாகவோ, ஆலய வளாகத்திலோ, தனிநபர்களோ, குடும்பமாகவோ, சங்கத்தினரோ ஆடு, கோழி வெட்டுவதற்கு கண்டிப்பாக ” அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புனித செபஸ்தியான் கொவில் நிர்வாகிகள் சார்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


You must be logged in to post a comment.