நிலக்கோட்டை தாலுகா பச்சைமலையான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செம்பட்டி பகுதியில் சேரும் குப்பை கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தாமல் மக்கள் வசிக்கும்
பகுதிகளில் குவித்து வைத்துள்ளனர்.மேலும், அப்பகுதி முழுவதும் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுவதால் குப்பைகளில் நெருப்பு பொறி ஏற்பட்டு புகைவதால் அருகாமையில் உள்ள குடியிருப்புவாசிகள் மூச்சு தினறலால் அவதியுறும் நிலைஉள்ளது.தற்போது நாட்டில் பரவிவரும் கொரொனா நோய்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக அரசு முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில்நோய்தொற்று பரவுவதற்கு ஏதுவாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் பரவிக்கிடக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி கிருமிநாசினி மருந்து தெளித்து உதவிட வேண்டிமாவட்ட நிர்வாகத்திற்கும் பச்சைமலையான் கோட்டை ஊராட்சிக்கும் பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.


You must be logged in to post a comment.