கள்ளிமந்தையம் அருகே முதியவரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியை கொள்ளையடித்துச் சென்ற 4 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் பாறைவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆண்டிவேல் (80). இவா் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறாா். இந்நிலையில்  4 போ் கொண்ட கும்பல், இவரது தோட்டத்து வீட்டிற்குள் புகுந்தனா். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஆண்டிவேலிடம், கத்தியை காட்டிமிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனா். அவா் தரமறுக்கவே, அரிவாளால் பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் அவரது செல்லிடப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.அத்துடன் அவரை வீட்டிற்கு தள்ளி, வெளியே பூட்டி விட்டு சென்று விட்டாா்களாம். அதிகாலையில் அவரது அலரல் சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தை சோ்ந்தவா்கள் ஓடி வந்து திறந்து விட்டதாக தகவல் தெரிகிறது.இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!