ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் பள்ளிவாசலுக்கு
அருகே முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. அதன் சுவற்றில் 28/11/19 வியாழக்கிழமை இரவு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் கொடியை பெயிண்டினால் வரையப்பட்டதோடு அருகாமையில் இருக்கும் கொடி மரத்திலும் ஒருசிலர் வண்ணம் தீட்டி வைத்திருந்திருந்தனர். காலையில் இதை கண்ட அப்பகுதியில் வாழும் முஸ்லீம்கள் அதிர்ச்சி அடைந்து செம்பட்டி காவல்துறையினருக்கு புகார் அளித்ததின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உடனடியாக தலையிட்டதின் பேரில் ஒட்டன்சத்திரம் துணை காணிப்பாளர் சீமைச்சாமி மற்றும் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் பாலகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் முஸ்லீம் பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேட்டுக்கொண்டதின் பேரில் துணை கண்காணிப்பாளர்கள்
இருவரும் அவர்களை சமாதானம் செய்து வண்ணம் தீட்டப்பட்டிருந்த இடங்களை அளித்ததோடு உடனடியாக விசாரித்து இந்த செயலில் ஈடுபட்ட ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்ததோடு அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சுமார் நான்கு மணி நேரத்தில் இச்சம்பவம் தொடர்பாக அசம்பாவிதம் நடக்காமல் தடுத்ததோடு தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


You must be logged in to post a comment.