சித்தையன் கோட்டையில் முன்விரோதம் காரணமாக இருநபர்கள் ஒருவரை தாக்கியதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் ஷிரி வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் நாவராத்திரிவிழா ஒன்பதாவது நாளை முன்னிட்டு பேருந்து நிலையம்அருகில் உள்ள மூக்கப் பிள்ளை பார்வதி அம்மாள் திருமண மண்டபத்தில் அண்ணதானம் ஏற்பாடு செய்பப்பட்டு நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதற்காக செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டுள்ளனர்.

 சித்தையன்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் (35) என்பவரை முருகவேல்(43) மற்றும் சுப்பையா (45) ஆகியஇருவரும் முன்விரோதம் காரணமாக தாக்குவதாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரையும் பிடித்து செம்பட்டி காவல் நிலையத்திற்க்கு அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் நடக்க இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டதோடு பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!