திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த தாமோதரன், மனைவி ரோகினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்களுக்கு ஆண், பெண் 2 குழந்தைகள் உள்ளனா்.குடும்பத்தகராறு காரணமாக ரோஹினி தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் இருக்கும் தனது தாய் சுப்புலட்சுமிக்கு செல்போன் மூலம் தகவல் கூறிவிட்டு அனைப்பட்டி அணைக்கு சென்றுவிட்டாா். ரோகிணியின் தாயார் சுப்புலட்சுமி திண்டுக்கல் நாகல்நகர் வந்து தனது மகளை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் விசாரித்து விட்டு தெரியவில்லை என்றவுடன் நகர் தெற்குகாவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகர் தெற்கு காவல் ஆய்வாளர்
சரவணன் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக ரோகினியிடம் சமாதானம் செய்து கொண்டே அனைப்பட்டி சென்று ரோகிணி கண்டுபிடித்து சமாதானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தை கைவிட செய்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் ஆய்வாளர் சரவணன் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ரோகினியின் கணவர் தாமோதரனை வரவழைத்து இருவருக்கும் அறிவுரைகளை கூறி பிரச்சினையை தீர்த்து அவரது குடும்பத்தினரிடம் ரோகினியையும் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









