கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்த குடும்பங்களுக்குஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ரூயாய் 6000 ஆயிரம் நேரடி பண உதவி வழங்கவேண்டும்..நலிவடைந்த குடும்பங்களை இனம்கான வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்கள் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, அமைப்பு சாரா நலவாரியத்தரவுகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பெறப்படும் தகவல் அடிப்படையில் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தக்கோரியும் மத்திய அரசு உடனடியாக இந்த உதவியை மாநில அரசுகள் மூலம் செய்யவேண்டியும் இதன் மூலம் பலகோடி குடும்பங்கள் பட்டினியிலிருந்து காப்பாற்றப்படும் என நாடுமுழுவதும் தொண்டு நிறுவனங்கள் கையெழுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஒரு பகுதியாக நிலக்கோட்டையில் சைல்டு வாய்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில், சைல்டு வாய்ஸ் நிர்வாக அறங்காவலர் அண்ணாதுறை, திட்ட மேலாளர் விக்னேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் சிவநாகஜோதி,பிரின்சி,ராணி, ஜெனிபர், வீரக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You must be logged in to post a comment.