திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள வேலாம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, எஸ் பி
தனிப்படை Si மாரிமுத்து மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடி வேட்டையில் தனிப்படை காவலர் மாறு வேடத்தில் சென்று ரூ.2000 கஞ்சா வேண்டும் என கேட்டுள்ளார். தனித்தனி பொட்டலமாக வாங்கியுள்ளார்.இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலாம்பட்டியை சேர்ந்த தேடாசெல்வம் (75) மற்றும் பிரபு(25) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம்,கஞ்சாவையும் பறிமுதல் செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.சின்னாளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.மேலும்,
SP தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரக்கல்லில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அழகுபாண்டி(30) சுப்புரமணி(55) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சுமார் ரூ.35,000 மதிப்புள்ள 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து செம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்.


You must be logged in to post a comment.