ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பகுதிகளாகிய காமன் பட்டி, கூலம்பட்டி பகுதியில் சுகாதாரதுறையினர் சார்பாக உடல்
வெப்ப பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் சின்னாளபட்டி அரசு மருத்துமனையில் பனியாற்றும் மருத்துவர் செந்தமிழன் மற்றும்ஆத்தூர் தாலுகா சுகாதார ஆய்வாளர்கள் சந்திர மோகன், ரெங்கசாமி, பூபதி சுரேஸ்தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நலத்திட்ட குழுவினர் ரதிதேவி, தெய்வ கன்னி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த முகாமில் பாளையங்கோட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த காமன்பட்டி, கூலம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் முன்வந்து தங்களை பரிசோதனை செய்து கொண்டனர்.


You must be logged in to post a comment.