காவல் நிலையத்திற்கு களப்பயணம் . காவல் நிலையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

சாதாரணமாக அந்த காலத்தில் நம் வீடுகளில் காவல் நிலையம் சென்று வந்தாலே குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள்வருவார்கள்.காவலர்களே என்றாலே சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒரு பயம் உண்டு.அதனை போக்கவவும்,காவல் நிலையத்தை அறிந்து கொள்ளவவும் காவல் நிலையமும் மற்ற அரசு அலுவலகங்கள் போல்தான் .அதில் பணியாற்றும் அலுவலர்களும் நம் சகோதரர்கள் தான் .பயம் இல்லாமல் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்கிற நோக்கில் மாணவர்களை காவலர்களுடன் கலந்துரையாட செய்து காவல் நிலையத்தை பற்றி அறிந்து கொள்ள களபயணமாக தேவகோட்டை நகர் காவல் நிலையத்தை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர் கருப்பையா ,ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர் காவல் நிலையத்திற்கு மாணவர்களை களப்பயணமாக அழைத்து சென்றனர்.அங்கு காவல் நிலைய ஆய்வாளர் கீதா ,சார்பு ஆய்வாளர்கள் வெற்றிவேல்,முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா விளக்கமளித்தார்.காவல் நிலையத்தில் எவ்வாறு புகார் மனு கொடுப்பது,முதல் தகவல் அறிக்கையில் என்னென்ன விவரங்கள் இருக்கும்,கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் எவை என்று மாணவ,மாணவிகள் சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர்.பள்ளியின் சார்பாக மாணவர் அய்யப்பன் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!