இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றி! தேவகோட்டை பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், விண்வெளியில் இரு தனித்தனி விண்கலன்களை ஒன்றாக இணையச் செய்யும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

அந்த வகையில் இஸ்ரோ இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் ஸ்பேடெக்ஸ் திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் சுமந்து சென்றது.

ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

இதன் மூலம் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் இரு தனித்தனி விண்கலன்களை ஒன்றாக இணையச் செய்யும் தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் இதுவரை, ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் விண்வெளி அமைப்புகளிடம் மட்டுமே உள்ளது. நான்காவதாக இந்தியாவின் இஸ்ரோ அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. என்கிற தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!