சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமய ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 80 ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இத் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கு வருகிறார் ஆண்டு தோறும் கந்த சஷ்டி பெருவிழா பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான விழா முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதளுடன் துவங்கியது முன்னதாக பால தண்டாயுதபாணி முருக பெருமானுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீப தூப ஆராதனை காண்பித்து பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர் விழாவை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் முருகப்பெருமாள் பல்வேறு வாகனங்களை திருவிதி உலா வருகிறார். விழாவின் சிகர் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் வைபவம் 27,28 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.


You must be logged in to post a comment.