இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி.

இந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை மையமாக வைத்து செயல்படும் BRIOBLISS எனும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று THROMBOBLISS Syrup எனும் இரத்த அணுக்களை 72 மணி நேரத்தில் அதிகரிக்கும் மருந்தை ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமாக கீழை நியூஸ் சார்பாக அந்நிர்வாகத்தை தெடர்பு கொண்ட பொழுது இந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான R.சத்தியநாராயனண் என்பவர் இத்தகவலை உறுதி செய்ததுடன், ஏழை எளிய மக்களுக்கு இச்செய்தியை எத்தி வைக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் மருந்துகளின் தேவைகளுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Admin Office: No. 14, Elliots Beach Road, North End, Besant Nagar, Chennai – 600090. Ph : 044 – 42646010. Fax : 044 – 42646011. Mob : 09444320704 Email :[email protected]

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









