கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகையை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அரசுக்கு சொந்தமான நிலம் என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி நகராட்சியின் பராமரிப்புக்கு கீழ் சென்றது. தனியார் வசம் இருந்தவரை வேலி போட்டு அடைக்கப்பட்டு இருந்த இடம், நகராட்சியின் வசம் வந்த உடன் குப்பை கொட்டும் கூடாரமாகவே மாறிப்போனது.
பின்னர் இது சம்பந்தமாக கடந்த ஜுலை மாதம் நகராட்சி ஆணையரிடம் நேரடியாக பேட்டி எடுத்த பொழுது, அந்த இடம் பொதுமக்களுக்கு உதவும் வகையில் துணை அலுவலகம் அல்லது சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பூங்கா அமைக்கப்படும் என்றார். ஆனால் இது வரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் நோய்கள் பரவும் கிடங்காகவே உள்ளது.
இது சம்பந்தமாக கீழைநியூஸ் இணையதளத்தில் “டெங்கு கொட்டகையாக மாறி வரும் வடக்குத் தெரு ட்ரக் கொட்டகை” என்ற தலைப்பில் நகராட்சிக்கு சுட்டிக்காட்டி கடந்த நவம்பர் 10,2016 அன்று செய்தி வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுதாவது நகராட்சி விழிக்குமா??.
https://keelainews.in/2016/11/30/truckshed/

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










