டெங்கு கொசு உற்பத்தி ஆக காரணமாக இருக்கும் நிறுவனங்களுக்கு அதிரடி அபராதம், இராமநாதபுர மாவட்டத்தில் தீவிரம்…

20/10/2017 அன்று இராமநாதபுர துணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் குமரகுருபரன் தனியார் மின் உற்பத்தி நிறுவன ஆய்வின் போது கொசுப்புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பொது சுகாதார சட்டம் பிரிவு 134 மற்றும் 269 ,1939ன் அடிப்படையில் டயர்கள் நிறைய அடுக்கிவைக்கப்பட்டிருந்ததாலும், கொசுப்புழுக்கள் உற்பத்தி இருந்ததாலும்,  சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு துணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் குமரகுருபரன் ஐந்து லட்சம் அபராதம் விதித்து பணத்தை கருவூலத்தில் செலுத்த உத்தரவிட்டார்.

ஆய்வாளர்கள் உடன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன்  மற்றும் புதுமடம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் கருணாநிதி உடன் இருந்தனர்.

அதேபோல் இராமநாதபுரத்தில் உள்ள பாரதிநகரில் உள்ள கலைவாணி பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக ஏதுவாக சுகாதாரமின்றி இருந்ததால் கோட்டாட்சியர் பேபி அபராதம் விதித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!