இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் ஓம்சக்தி நகர் பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக உள்ளதாலும், மக்கள் தொகை அதிகமாக உள்ளதாலும் டெங்கு நோய் பரவாத வண்ணம் சுகாதார துறையினர் பணிகளை சிறப்பாக செய்து டெங்கு காய்ச்சல் பெருமளவு பரவாத வண்ணம் தடுத்து வருகின்றனர். பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் பலனாக மற்ற மாவட்டங்களில் இருப்பது போன்று அல்லாமல் இம்மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது.
இது தொடர்பாக துணை இயக்குனர் நலப்பணிகள் இராமநாதபுரம் டாக்டர்.குமரகுருபரன் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் ஆகியோர் மாவட்டத்தில் பல வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு சுகாதார துறை அலுவலர்களை டெங்கு கட்டுப்பாட்டு பணியில் முடுக்கி விட்டு வருகின்றனர். மேலும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனியார்ன நிறுவனங்கள் பணியாளர்களுக்கும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் இராமநாதபுரம் SIT செவிலியர் பள்ளியில் 65 மாணவியர் கலந்து கொண்ட பயிற்சி முகாம் துணை இயக்குனர் டாக்டர்.குமரகுருபரன் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் அவர்கள் தலைமையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு செவிலிய மாணவியர்களுக்கு நடத்தப்பட்டது.

இன்று இராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் பணி, கொசுப்புழு ஒழிப்பு பணியில் செவிலிய மாணவர் 60 பேர் 400 வீடுகளில் டாக்டர் குமரகுருபரன் தலைமையில் ஈடுபட்டனர். கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டது. இன்னொரு முறை கொசுப்புழு கண்டறியப்பட்டால் 2000ரூபாய் அபராதம் அல்லது ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பொதுமக்கள் ஒத்துழைப்புடன் டெங்கு நோயை அறவே ஒழிப்போம் என மாவட்ட மலேரியா அலுவலர் கூறினார். சுகாதார ஆய்வாளர் கோபிநாத் மற்றும் நாகேந்திரன் ஊராட்சி செயலர் உடன் இருந்தனர். உச்சிப்புளி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் வீடுகளில் திறந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









