கீழக்கரை உள்ளிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் சமூக அமைப்புகள் மூலமாக இன்று பல இடங்களில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கல்..

இராமநாதபுரம் காவல்துறை அதிகாரி ஓம்பிரகாஷ் மீனா உத்திரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சித்தா மருந்துகள் மற்றம் நிலவேம்பு கசாயம் காவல்துறையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.  மேலும் காவல்துறை உயர் அதிகாரியால் காவல் நிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தூய்மையை பேண வலியுறுத்தி சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டது.  மேலும் இன்று இராமநாதபுரம் ரிசர்வ் போலிஸ் துறை வளாகத்தில் காவல்துறை அதிகாரி இன்பமணி தலைமையில் இன்று (15-10-2017) நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

கீழக்கரை

கீழக்கரையில் காவல் துறை உயர் அதிகாரி பாலாஜி தலைமையில் டெங்கு ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது. அப்பேரணியை அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.  அதைத் தொடர்ந்து காவல் துறை அலுவலகம் மற்றும் கீழக்கரை முக்கிய வீதி பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.   இந்நிகழ்வில் கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அதே போல் இன்று கீழக்கரையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக இன்று (15-10-2017) முதல் மூன்று நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மேலும் கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக இயற்கையான மூலிகைகள் மூலம் தயார் செய்யப்பட்ட நிலவேம்பு கசாயம் காய்ச்சப்பட்டு சுமார் 3000 நபர்களுக்கு தெற்கு தெரு பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!