இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளதனமாக மது பாட்டில் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய கோரியும் கள்ள சந்தையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இதற்கு துணை போகும் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ரவி தலைமை தாங்கினார். வீர குலத் தமிழர் படை மாநில பொறுப்பாளர்கள் மது கணேஷ், ராஜா, பிரபு ஆகியோர் முன்னிலை வைத்தனர். வீர குலத் தமிழர்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் ,தமிழக மக்கள் முன்னணி மாநில பொறுப்பாளர் பாவல் , ஆதித்தமிழர் கட்சியினுடைய தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ,சமூக செயல்பாட்டாளர் தமிழ்வாணன் , மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் , பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் சையது ஜமாலி , கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முஹம்மது ஃபரூஸ் ,முஹம்மது சுபைர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் .
வீர குலத் தமிழர் படையின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பிரியா, மகேஸ்வரி, பவித்ரா மற்றும் வீர குலத் தமிழர் படை நிர்வாகிகள் தோழமை கட்சியினர் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.