ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டி பிளாக் அருகே தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெறக்கோரியும் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் சுப.த.திவாகர், குணகேசரன், ராமர், இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்.பி பவானிராஜேந்திரன், மண்டபம் ஒன்றியம் பிரவீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்.என்.ரவி க்கும் எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







You must be logged in to post a comment.