ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டம் ராமாபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்க பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழு இணைந்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னெடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் தனபால் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் மயிலாடுதுறை புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி உட்பட்ட 13 மாவட்டங்களுக்கு மேல் 18000 குலுக்கல் மற்றும் 5 லட்சத்துக்கு மேல் உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கி வருகிறது. எனவே அரசாணை 66-ஐ ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டும், சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பாஜக மாவட்ட தலைவரோடு இணைந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து முறையிடுவதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

You must be logged in to post a comment.