ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்து பஜார் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) சார்பில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை நிறுத்தவும் , புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசே தொடர்ந்து நடத்தவும் , ஒன்றிய பி.ஜே.பி அரசு மின் கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகளை நிர்பந்திப்பதை கைவிடவும் , தி.மு.க தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடவும் , கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை சரி செய்யவும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி நகர் செயலாளர் தோழர் பென்னிமின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கலையரசன் தாலுகா செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் பாசித் இலியாஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ( மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள் உறுப்பினர் உட்பட கலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்

You must be logged in to post a comment.