மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் HCL foundation மற்றும் OFERR நிறுவனமும் இணைந்து எனது பள்ளி நிகழ்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். OFERR நிறுவனத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி ஜெய்சங்கர், HCL foundation program officer ராஜலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தை உரிமைகள், குழந்தைகளின் பாராளுமன்றம் மற்றும் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிலையான மாதிரியின் மூலம் பள்ளிகள் குழந்தை நட்பு சூழலை உருவாக்க அவர்களின் திறன்களை வளர்த்தெடுத்தல், தலைமை பண்புகளை வளர்த்தல், சமூக உணர்ச்சி வளர்த்தெடுத்தல், நீடித்த நிலை உலக குறிக்கோள் தொடர்பான தெளிவினை ஏற்படுத்துதல், பிரச்சினைகளை கண்டறியவும் அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான தருணங்களை வளர்த்தல் மற்றும் தற்காப்பு கலைகள், சிலம்பம், நாட்டுப்புற கலைகள் போன்றவற்றை எடுத்துரைக்கப்பட்டது,
மதுரை செய்தியாளர் கார்த்திக்

You must be logged in to post a comment.