மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு தீபாவளி புதிய துணிமணி மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. இப்பள்ளியில் கடந்த 1981-1985 கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து தங்கள் படித்த பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் வருடம் தோறும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வருடம் தோறும் தீபாவளிக்கு தாய் தந்தை இல்லாத மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு புதிய துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி வருகிறார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். விஜயகுமார் ஜெய்லானி பிரேம்குமார் பிரசாத் கண்ணன் ராமநாராயணன் விஜயகுமார் பழனிக்குமார் ஆகியோர் மற்றும் இதர நண்பர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருவது இப்பகுதியில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் மனதார பாராட்டினார்
.உசிலை மோகன்
You must be logged in to post a comment.