மத்திய பிரதேசம் போபால் பகுதியில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவாக விசாரித்த கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ம..பி. அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி முதல்முறையாக 46 நாட்களில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ம.பி. மாநிலம் சாகர் மாவட்டம் ரெக்லி என்ற பகுதியைச் சேரந்தவன் நாராயணன் பட்டேல், இவர் கடந்த மே மாதம் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சாகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில் குற்றவாளி நாராயண் பட்டேலுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுதன்ஸூசக்சேனா தீர்ப்பளித்தார்.
இது குறித்து சாகர் மாவட்ட எஸ்.பி., சத்தியேந்திர சுக்லா கூறுகையில், குற்றவாளி கடந்த மே 24-ம்தேதி கைது செய்யப்பட்டான். அவன் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 72 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. டி.என்.ஏ. சோதனை அறிக்கைகள் உள்பட அனைத்தும் 46 நாட்களில் விசாரணை முடிந்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ;குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ம.பி.யில் கடந்த ஆண்டு டிசம்பரில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஒப்புதல் கிடைக்க பெற்று கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் படி முதல் முறையாக பலாத்கார குற்றவாளி நாராயணன் பட்டேலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









