துணை முதல்வர் உதயநிதியின் காரின் பின்னால் சென்ற கார் மோதிய விபத்தில்சிகிச்சையில் இருந்தவர் இறப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில்சென்று கொண்டு இருந்தார். அவரது காருக்கு பின்னால் ஏராளமான திமுக நிர்வாகிகள் கார் வந்து கொண்டிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அந்த கார்கள் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக அதில் ஒரு கார் சித்தாலங்குடியை சேர்ந்த விருமாண்டி மகன் ராஜேந்திரன் (வயது 60) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலையில் பலத்த காயமும் வலது கால் முறிவும் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் காலை 9.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!