மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்த உதயக்குமார் மகன் பிரகாஷ் (25) மற்றும் செல்லூர் பகுதியைச் சேர்ந்த சுருளி மகள் திவ்யா(21) ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு
வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஈச்சம்பட்டியில் பிரகாஷ் வீட்டில் வசித்து வந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக தன் தாயார் வீட்டிற்குச் சென்ற திவ்யா 4 மாதம் கழித்து 15 நாட்களுக்கு முன் பிரகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.இங்கு திவ்யாவிற்கு திடீரென வயிற்றுவலி வந்ததாக கூறப்பட்ட நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யா இறந்துவிட்டதாக கூறினர். அதனைதொடர்ந்து திவ்யாவின் உடல் பிரேதபரிசோதணைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தனது மகள் திவ்யாவின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி சிந்துபட்டி காவல் நிலையத்தில் திவ்யாவின் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆனதால் இளம்பெண் மரணம் குறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


You must be logged in to post a comment.