திருப்பரங்குன்றம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்கியிருந்த முதியவர் மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்தவர்சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டேர் தங்கி உள்ளனர்.
இங்கு சேர்க்கப்பட்டிருந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தியாகராஜர் பொறியியல்
கல்லூரியில் கொரானா தனிமை படுத்துதல் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் தங்க வைக்கப்பட்ட மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்ற 63 வயது முதியவர் மன உளைச்சல் காரணமாக கல்லூரியில் 2 தளத்திலிருந்து குதித்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்தது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்க கூட மருத்துவ குழுவினர் யாரும் வரவில்லை எனவும் 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விடுதியில் இருப்பவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனுஷ்கோடி இன்று அதிகாலையில் பலியானார் இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









