திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே வங்கி உதவியாளர் துக்க வீட்டிற்கு சென்று விட்டு வைகை கால்வாயில் கைகால் கழுவ சென்ற போது வழுக்கி விழுந்து பலியானார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செக்காபட்டியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ரமேஷ் என்ற மாணிக்கம் வயது 35 இவர் விருவீடு மற்றும் வத்தலக்குண்டு கனரா வங்கிகளுக்கு வரும் முதியோர் உதவித் தொகையை வாங்கி முதியோர்களுக்கு வழங்கி அதில் வரும் கமிஷனை பெற்று வாழ்ந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி பின்பு விவாகரத்தாகி விட்டது. நேற்று மதியம் செக்காபட்டி அருகே உள்ள குன்னுவாரன் கோட்டையில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு அருகே உள்ள வைகை சிமிண்ட் கால்வாய்க்கு கைகால் கழுவ சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி உள்ளே விழுந்தார். அதிக அளவில் செல்லும் தண்ணீர் அவரை இழுத்து சென்றது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டும் பயனில்லை.
பின்னர் தகவலறிந்த விருவீடு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விளாம்பட்டி போலீசார் நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர் அணைப்பட்டிக்கு விரைந்து சென்று ரமேஷ் என்ற மாணிக்கம் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் அதிகளவில் சென்றதால் ஒருமணிநேரம் தீயணைப்பு துறையினர் போராடி உடலை அணைப்பட்டி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகம் அருகே சென்ற சிமிண்ட் கால்வாயி்ல் மீடடனர். தகவலறிந்த வந்த ரமேஷ் என்ற மாணிக்கம் குடும்பத்தினர் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உருக வைக்கும் விதமாக இருந்தது. விளாம்பட்டி போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .


You must be logged in to post a comment.