மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் பக்தர் மயங்கி விழுந்து பலி…

மதுரை வில்லாபுரம் கற்பகம் நகரை சேர்ந்த நீலகண்டன் இவரது மனைவி மகேஸ்வரி வயது55 ஆகியோர் இன்று (17/05/2019) காலை சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்குள் கோவில் வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் போலீஸ் உதவியுடன் மகேஸ்வரியின் உடல் வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தினசரி சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் மீனாட்சி அம்மன் கோவிலில் முதலுதவியும் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் உடனடியாக கிடைக்காதது மிகவும் வேதனையானது என பக்தர்கள் தெரிவித்தனர். முதலுதவி அளித்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!