கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை… ஆய்வாளர் மாரடைப்பால் இறந்த பரிதாபம்..

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை போது, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பாபு (51).  இவர் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, ஆய்வாளர் பாபுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்ததால், அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு வாந்தி எடுத்த போது, நடிப்பதாகக் கூறி லஞ்ச ஒழிப்பு துறையினர் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்ததாக உடன் இருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாரடைப்பால் உயிரிழந்த கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாபுவிற்கு,  அகிலா என்ற மனைவியும், ஒரே மகன் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்:-வேலூர் மாவட்ட செய்தியாளர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!