செய்தியாளர்களின் நண்பர்.. காவல் உளவு பிரிவு சிறப்பு ஆய்வாளர் சாலை விபத்தில் மரணம்..

வேலூர் செய்தியாளர்களின் நண்பர் காவல் உளவு பிரிவு சிறப்பு ஆய்வாளர் ஞானம் (எ) ஞானசேகரன் மரணம். இவர் வேலூர் செய்தியாளர்களுக்கு பல ஆண்டுகளாக மாவட்ட செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் கொடுத்து அனைத்து செய்தியாளர்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் செய்தியாளர்கள் அனைவரும் அவரை மரியாதையுடன் இன்றளவும் நடத்தி வந்தனர்.

இன்று (18/04/2019) நடந்த சாலை விபத்தில் அவர் மரணமடைந்தார் செய்தியாளர்கள் காவல் துறையினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவருடைய மறைவுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்தியப்பாதை இதழ் நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!