மில் காவலாளியின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது மகன் பேட்டி..வீடியோ..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல் இருந்து கரூர் சாலையில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் நாகம் பட்டியைச் சேர்ந்த சின்ன கவுண்டர் மகன் காளியப்பன்(63) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார், இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு சென்ற காளியப்பன் அதிகாலை 5 மணி அளவில் தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்க்கு முன்பே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் காளியப்பன் மகன் முருகபாண்டியிடம் தனியார் நூற்பாலை நிர்வாகம் காளிமுத்து காலையில் கழிப்பறை செல்லும் போது விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உயிர் உள்ள நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளனர். காளியப்பன் மகன் முருகபாண்டி என்பவர் தனது தந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கழிவறை சென்றபோது கீழே விழுந்ததில் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றும் கண்டிப்பாக என் தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!