உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி வழியாக செல்லும் திருமங்கலம் பிரதான கால்வாயில் அடையாளம் தெரியாத 45வயது மதிக்கதக்க பெண் சடலம் கண்டெடுப்பு. உசிலம்பட்டி தாலகா போலீசார் விசாரனை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி வழியாக திருமங்கலத்திற்கு செல்லும் பிரதான கால்வாயில் தற்போது வைகைஅணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமங்கலம் பிரதான கால்வாயில் அடையாளம் தெரியாத 45வயது மதிக்கதக்க பெண் சடலம் ஆற்றில் அடித்து வந்துகொண்டிருந்ததை பார்த்த குப்பணம்பட்டி பொதுமக்கள் உடனே உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். யாராவது பெண்னை அடித்துகொண்று ஆற்றில் வீசப்பட்டதா? இல்லையெனில் இவரே தற்கொலை செய்துகொண்டாரா? என உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.
செய்தி: மோகன், உசிலம்பட்டி


You must be logged in to post a comment.