சில தினங்களுக்கு முன்பு துவரிமான் பகுதியில் விபத்தில் சிக்கிய சார்பு ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது..

மதுரை நாகமலை புதுக்கோட்டை துவாரிமான் விளக்கு பகுதியில்  திண்டுக்கல்லில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 51 வயதான செல்லப்பாண்டி இவர் திண்டுக்கல்லில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊரான  விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகில் உள்ள சோலைகொண்டான் பட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியில் வந்தபோது., கீழ மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி ஸ்ரீ அரபின்டோ மீரா பள்ளி வாகனம் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சாலையை கடக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக சார்பு ஆய்வாளர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இந்த இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர்.

சமூக ஆர்வலரின் கோரிக்கையானது துவரிமான் விளக்கு பகுதியில் பள்ளிகள் பள்ளிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தனியார் குடியிருப்புகள் அதிகளவு இருப்பதால் அப்பகுதியில் முறையான சாலை பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அப்பதியில் பேரிகாடுகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!