இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவின் அரசு நிதி உதவியுடன் செயல்படும் மனநல காப்பகத்தில் 60 வயது முதியவர் சுரேஷ் என்பவர் தங்கியிருந்தார். ஜூலை 24 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மனநல காப்பக மேலாளர் மாடசாமி புகாரில் ஏர்வாடி தர்ஹா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏர்வாடி மனநல காப்பகத்தில் முதியவர் மயங்கி விழுந்து பலி..
இராமநாதபுரம், ஆக.9 –
You must be logged in to post a comment.