குளிக்கச் சென்ற மாணவர் கண்மாய் நீரில் மூழ்கி பலி..

இராமநாதபுரம், நவ.14- முதுகுளத்தூர் அருகே கண்மாய் கரை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.  இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் நிகாஷ் கண்ணன், 14. இவர் இங்குள்ள தனியார் மெட்ரிக்.பள்ளி 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை இவர் தனது நண்பர்களுடன் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது அவர் கண்மாயின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினார். நிகாஷ் கண்ணனை சக நண்பர்களால் மீட்க இயலாமல் போனது. குளிக்கச் சென்ற நிகாஷ் கண்ணனை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை தேடிச்சென்றபோது, நிகாஷ் கண்ணன் கண்மாய் நீரில் மூழ்கி பலியானது தெரிந்தது. முதுகுளத்தூர் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பின் நிகாஷ் கண்ணன் உடலை மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பினர். இது குறித்து முதுகுளத்தூர் போலீசில் பாண்டியராஜன் புகார் அளித்தார். இதன்படி எஸ்ஐ சரவணன் வழக்குபதிந்து இன்ஸ்பெக்டர் இளவரசு விசாரித்து வருகிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!