திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் பலி. தென்னந்தோப்பில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே கீழ முத்துப்பட்டி பொற்காலம் நகரை சேர்ந்தவர் முத்துராமன் இவரது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் அஜித்குமார் (வயது 27) இவர் கப்பலூர் அருகே தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான 13 ஆடுகளை தினமும் ஈஸ்வரி மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இன்று வழக்கம் போல் ஈஸ்வரி மேய்ச்சலுக்கு ஆடுகளுக்கு கொண்டு சென்று மாலை 3 மணி அளவில் அவசரமாக வீடு திரும்பியுள்ளார். பழக்கப்பட்ட ஆடுகள் மேச்சலில் இருந்து வீடு நோக்கி வந்து விடுவது வழக்கம்.
இன்று மாலை 5 மணி ஆகியும் ஆடுகள் வீட்டிற்கு வராததால் ஈஸ்வரி மற்றும் அவரது மகன் அஜித் ஆகியோர் தேடிப் பார்த்தபோது அருகில் உள்ள தென்னந்தோப்பில் 13 ஆடுகளும் இறந்து கிடந்தன.
இது குறித்து அஜித் குமார் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆடுகள் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அடிக்கடி சென்று வருவதால் தோப்பின் உரிமையாளர் கோபால் கடந்த இரண்டு முறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை கோபால என்பவரது தோப்பில் 13 ஆடுகளும் இருந்து கிடந்ததையடுத்து அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்த ஆண்டுகளை கால்நடை மருத்துவரின் மூலம் உடற்கூறு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









